Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05.04.2025) | 6 AM Headlines | ThanthiTV
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ஆயிரத்து 280 ரூபாய் குறைந்தது... ஒரு சவரன் தங்கம் 67,200 ரூபாய்க்கு விற்பனை...
- சேலம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...
- வேலூர், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இரவிலும் கொட்டித் தீர்த்த கனமழை.... குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி...
- தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பெய்த கனமழை காரணமாக அரசு மருத்துவமனை வளாகத்தில் தேங்கிய நீர்.... இரவில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நோயாளிகள், பொதுமக்கள் அவதி...
- தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கொட்டித் தீர்த்த மழை... குற்றால அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை....
- புதுக்கோட்டை அடுத்த மழையூரில், டாஸ்மாக் கடை அருகே இளைஞர் வெட்டிப் படுகொலை.... குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, மறியலில் ஈடுபட்ட உறவினர்கள், டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு...
- சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு, 8ம் தேதி உள்ளூர் விடுமுறை... ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு....
- கொளுத்தும் கோடை வெயிலால், தமிழகத்தில் வேகமாக பரவும் கண் அழற்சி நோய் ... முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என கண் மருத்துவர் வலியுறுத்தல்....
- திருவண்ணாமலை அருகே, ஆரம்பப்பள்ளி மாணவரை துடைப்பத்தால் தாக்கிய சத்துணவு ஊழியர்கள் சஸ்பெண்ட்... மாணவரை தாக்கிய வழக்கில், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை....
- காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் தாயார் குளம் தெப்பல் திருவிழா கோலாகலம்... ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்...
- ஓசூர் அருகே, தெரு நாய் கடித்து 3 வயது குழந்தை படுகாயம்.... வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது, நேர்ந்த பயங்கரம்....முகம் முழுவதும் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை....
- ஊட்டி, கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை....இ-பாஸ் கட்டுப்பாடு வாகனங்களுக்கு மட்டுமே என சென்னை உயர் நீதிமன்றம் தகவல்......