Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (23-09-2023) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (23-09-2023) | Morning Headlines | Thanthi TV;

Update: 2023-09-23 00:52 GMT
  • முதல்வர் ஸ்டாலின் பேசும் ஆடியோ உரை, இன்று காலை 7 மணிக்கு வெளியாகிறது... 'Speaking for INDIA'- தெற்கில் இருந்து வரும் குரல் என்ற தலைப்பில் வெளியாகும், இரண்டாவது ஆடியோ...
  • அண்ணாமலை விவகாரம் தொடர்பாக, பாஜக தலைவர் நட்டா மற்றும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தஙக்மணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் சந்திப்பு... அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் அமித்ஷா பேசுவார் எனவும் பிரதமரை சந்திக்க விரைவில் ஏற்பாடு செய்வதாகவும் உறுதி...
  • டெல்லியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முகாமிட்டிருப்பது பற்றி, இன்று கருத்து சொல்வதாக அண்ணாமலை பதில்... "அமித்ஷாவை அதிமுகவினர் முதலில் சந்திக்கட்டும்... பிறகு பார்க்கலாம்..." என பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி பேட்டி...
  • தமிழக பா.ஜ.க. குறித்து பதில் சொல்ல விரும்பவில்லை என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை பேட்டி... ஆளுநராக இருப்பதால் சமுதாய கருத்துக்களுக்கு பதில் அளிப்பதாகவும் விளக்கம்...
  • திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில், காணொளி காட்சி வாயிலாக முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் குளறுபடி... விழா ஏற்பாடு மற்றும் நெட் வொர்க் பிரச்சினைகளை கவனிக்காததால் வட்டார வளர்ச்சி அலுவலர் தற்காலிக பணி நீக்கம்...
  • அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னாள் உதவியாளர் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவு.... 3 நாட்கள் நீடித்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்...


Tags:    

மேலும் செய்திகள்