Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17.07.2025) | 6 AM Headlines | Thanthi TV
- ஆடு, மாடுகள் மாநாட்டை தொடர்ந்து, ஆகஸ்ட் 17ஆம் தேதி மரங்கள் மாநாடு... நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு...
- வரும் 21ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், 8 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டம்...
- மாவட்ட ஆட்சியரின் அனுமதியின்றி குடியிருப்பு பகுதிகளில் எந்த மதத்தினரும் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்த கூடாது... சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு....
- போலீஸ் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமாரின் இறப்பு சான்றிதழ் சகோதரரிடம் ஒப்படைப்பு... எஃப் ஐஆரில், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் இறந்ததாகவும், இறப்பு சான்றிதழில் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் இறந்ததாகவும் குறிப்பிட்டுள்ளதால் சர்ச்சை....
- ஐசிசி டெஸ்ட் பவுலர்கள் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார் இந்திய வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா.... ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் முதலிடத்தில் தொடர்கிறார் ரவீந்திர ஜடேஜா....