"பிப்.14ம் தேதி பசு மாடுகளை கட்டி பிடிங்க" - மத்திய அமைச்சகம் பரபரப்பு உத்தரவு | Feb 14 | Hug Day
பிப்ரவரி 14 ஆம் தேதி பசுக ்களை கட்டிப்பிடிக்குமாறு இந்திய விலங்குகள் நல வாரியம் முன்பு எப்போதும் இல்லாத ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி 14 ஆம் தேதியை பசுவை கட்டிபிடிக்கும் தினமாக கொண்டாடுமாறு இந்திய விலங்குகள் நல வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக வாரியம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், காமதேனு, கோமாதா என அழைக்கப்படும் எல்லா செல்வங்களையும் அளிக்கும் பசு, இந்திய கலாச்சாரம், பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கத்திய கலாச்சாரம் நமது வேத மரபுகள், பாரம்பரியங்களை மறக்கடிக்க செய்துவிட்டது எனவும் பசுக்களை கட்டிப்பிடிப்பது என்பது நேர்மறை எண்ணத்தை மேலோங்கச் செய்யும் எனவும், மகிழ்ச்சி அதிகரிக்கும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பு அமைச்சகம் உத்தரவின் பெயரில் இந்த உத்தரவை பிறப்பித்திருப்பதாக வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.