"பொது சிவில் சட்ட அறிவிப்பை எதிர்த்து முறியடிக்க வேண்டும்" -ஜனநாயக சக்திகளுக்கு திருமாவளவன் அறைகூவல்

Update: 2023-06-16 10:24 GMT

பொது சிவில் சட்டம் என்ற பெயரில், மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் அடைய முற்படும் பா.ஜ.க அரசின் மக்கள் விரோதப் போக்கிற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அனைத்துத் தளங்களிலும் படுதோல்வி அடைந்துவிட்ட பாஜக அரசு, மக்களின் கவனத்தைத் தனது தோல்வியிலிருந்து திசை திருப்புவதற்காகவே இத்தகைய பிரச்சனைகளை எழுப்புவதாகத் தெரிவித்துள்ளார். நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்துவதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத மோடி அரசின் பொது சிவில் சட்ட அறிவிப்பை எதிர்த்து முறியடிக்க, அனைத்து ஜனநாயக சக்திகளும் முன்வர வேண்டும் என்றும் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்