அசுர வேகத்தில் ஹேண்ட் பேக்கை பறித்த கொள்ளையர்கள் - நிலைகுலைந்து விழுந்த பெண்
தலைநகர் டெல்லியில் பெண்ணிடம் கைப்பை பறித்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிரேட்டர் கைலாஷ் பகுதியில் சாலை நடந்து சென்று கொண்டிருந்த ரஷிதா பஸாஸ் என்ற பெண்ணின் கைப்பையை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.
கடந்த ஜூலை 30 ஆம் தேதி இரவு நடைபெற்ற கொள்ளை சம்பவத்தின், சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
ஆனால், இதுவரை கொள்ளையர்கள் கைது செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.