போலீஸ் போல் நடித்து காவல் நிலையத்திற்குள் குண்டு வைத்த நபர் | Thailand | Police Station Blast
தெற்கு தாய்லாந்தில் காவல் நிலைய வளாகத்திற்குள் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. போலீஸ் அதிகாரி போல் உடையணிந்து மாறுவேடத்தில் வந்த குற்றவாளி வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை வளாகத்திற்குள் நிறுத்தி வெடிக்க வைத்ததாக காவல் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்தில் காவலர்கள், பொதுமக்கள் உட்பட மேலும் 29 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.