மாற்றுதிறனாளியை கட்டையால் சரமாரியாக தாக்கிய மர்ம கும்பல்... நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், பெட்ரோல் பங்கில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஊழியரை, 3 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.விருத்தாசலம் காட்டுக்கூடலூர் சாலையில் இயங்கி வரும் தனியார் பெட்ரோல் பங்க்கில், இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர், 50 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுள்ளனர். அப்போது, பணியில் இருந்து மாற்றுத் திறனாளி ஜெயராஜிடம், அந்த 3 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல், மாற்றுத் திறனாளியை கட்டையால் கண்மூடித்தனமாக தாக்கியது. இதுதொடர்பான புகாரின் பேரில், தாக்குதலில் ஈடுபட்ட சரவணன் மற்றும் அப்புவை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள தங்கதுரையை தேடி வருகின்றனர்.