கவுன்சிலர் மகனை காதலித்த சிறுமி.. போர்த்திய போர்வையுடன் சடலமாக மீட்பு - ஊரே தலையில் அடித்து கதறும் சோகம்

Update: 2023-05-27 03:30 GMT

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே, கிணற்றில் இருந்து 16 வயது சிறுமியின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சவாரிமேடு கிராமத்தைச் சேர்ந்த சேர்ந்த தங்கராசு - கலைவாணி தம்பதியின் இளைய மகள் தேவிகா, 11ம் வகுப்பு வரை படித்துவிட்டு, கடந்த ஓராண்டாக வீட்டில் இருந்து கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். தேவிகா தனது வீட்டின் அருகே குடியிருக்கும் திமுக வார்டு கவுன்சிலர் குணசேகரன் என்பவரின் மகன் கஜேந்திரனை காதலித்து வந்ததாகவும், இதனை அறிந்த கஜேந்திரனின் பெற்றோர், தேவிகாவின் குடும்பத்தினரை எச்சரித்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 24ம் தேதி வீட்டில் இருந்து இருந்து மாயமான தேவிகா, வீட்டின் அருகேயுள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். காதல் விவகாரத்தால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் குற்றச்சாட்டு விடுத்துள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்