வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட கார்.. ஹவுஸ் ஓனர் தகராறு - தட்டிக்கேட்ட போலீசாரின் கன்னத்தில் பளார்!
சென்னையில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரை உடைத்து, தட்டிக் கேட்ட காவலரை தாக்கிய வீட்டின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கே.கே. நகரில் வசித்து வருபவர் அரவிந்த். இவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை கட்டையால் அடித்து உடைத்துள்ளார். இதனால், காரின் உரிமையாளருக்கும் அரவிந்துக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், தகாத வார்த்தைகள் கூறி திட்டிய அரவிந்த் மீது காரின் உரிமயாளர் போலீசில் புகாரளித்துள்ளார். இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவலரையும் அரவிந்த் கட்டையால் தாக்கி கண்ணத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அரவிந்தை கைது செய்த போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில், ஏற்கெனவே முதலைமச்சர் குறித்து அவதூறாக பதிவிட்ட வழக்கில் அரவிந்த் கைது செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.