பஸ் டெப்போவுக்குள் நடந்த அடிதடி.. கிளை மேனேஜர், ஓட்டுநர் உட்பட ஐவர் சஸ்பெண்ட்

Update: 2023-02-25 02:46 GMT

பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனையில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக கிளை மேலாளர் உள்பட ஐந்து பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனையில், பணி ஒதுக்குவது தொடர்பாக கட்டுப்பாட்டாளர் யுவராஜ், ஓட்டுநர் ராஜா ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது, ஒருவரை ஒருவரை தாக்கிக் கொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து தருமபுரி மண்டல போக்குவரத்து மேலாளர் விசாரணை நடத்திய நிலையில், பணிமனை கிளை மேலாளர் இளங்கோவன், கட்டுப்பாட்டாளர் யுவராஜ், ஓட்டுநர்கள் ராஜா உள்ளிட்ட ஐந்து பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்