"அந்த நாற்காலி.. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மட்டும் தான்" - ரஜினியை பார்த்ததும் பரவசமான ரசிகர்கள்

Update: 2023-01-01 08:31 GMT

சென்னை போயஸ் தோட்டத்தில், தனது இல்லம் முன் குவிந்திருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.

ஒவ்வொரு பண்டிகையின்போதும், நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில், ஆங்கில புத்தாண்டான இன்று, அவரை காண ஏராளமான ரசிகர்கள், அவரது இல்லம் முன்பு குவிந்திருந்தனர்.

இதனிடையே, பட்டு வேட்டி, சட்டையுடன் வந்த நடிகர் ரஜினி, தனது ரசிகர்களை நோக்கி கையசைத்தபடி, புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.

இதனால், அங்கிருந்த ரசிகர்கள் நடிகர் ரஜினியை பார்த்து பரவசம் அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, இனிப்புகள் வழங்கி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்