சென்னை தி.நகரில் பயங்கரம்.. ஜவுளிக்கடை ஓனரின் காரால் விபரீதம் - பறந்து விழுந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்
சென்னை தியாகராய நகரில், சொகுசு கார் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து பெரியார் சிலை நோக்கி சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது, பின்னால் வேகமாக வந்த சொகுசு கார் மோதியது. அதில், இருசக்கர வாகன ஓட்டி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலின் பேரில் வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் விபத்தில் இறந்தது கே.கே. நகரை சேர்ந்த ரவிவர்மா என தெரியவந்தது. அதன் பிறகு சொகுசு காரை ஓட்டி வந்த சம்சுதீன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், விபத்துக்கு காரணமான சொகுசு கார் ஜவுளி கடை உரிமையாளருக்கு சொந்தமான என தெரியவந்ததை அடுத்து, போலீசார் அதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.