பாமக இளைஞரணி தலைவர் பொறுப்பில் இருந்து ஜி.கே.எம் தமிழ்க்குமரன் விலகி உள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸுக்கு கடிதம் எழுதியுள்ள அவர், இளைஞரணித் தலைவராக விருப்பப்பட்டு தன்னை ராமதாஸ் தேர்வு செய்ததாகவும், பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக பொறுப்பில் இருந்து தான் விலகிக் கொள்வதாகவும் குறிப்பிட்டு உள்ளார். பிரபல லைக்கா திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் தமிழ்க்குமரன் செயல்பட்டுவரும் நிலையில், இளைஞரணித் தலைவர் பொறுப்பில் இருந்து அவர் விலகி இருப்பது குறிப்பிடத்தக்கது.