நிறைவு பெற்ற நெய்தல் கோடை விழா... கடற்கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் - கழுகு பார்வை காட்சிகள்
கடலூரில் நடைபெற்று வந்த நெய்தல் கோடை விழா நிறைவு பெற்றது. மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்தாண்டிற்கான நெய்தல் கோடை விழா கடந்த வெள்ளிக்கிழமை துவங்கி நடைபெற்று வந்தது. இதில், அரசின் பல்வேறு துறைகள் சார்பில் கண்காட்சி அரங்கங்களும் தனி மேடை அமைக்கப்பட்டு, கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நெய்தல் கோடை விழா நிறைவு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், கடற்கரையில் மணற்பரப்பே தெரியாத அளவிற்கு ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர்.