வீட்டை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்கள்.. தற்கொலை மிரட்டல் விடுத்து உரிமையாளர்கள் - கன்னியாகுமரியில் பரபரப்பு

Update: 2022-11-06 12:44 GMT

வீட்டை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்கள்.. தற்கொலை மிரட்டல் விடுத்து உரிமையாளர்கள் - கன்னியாகுமரியில் பரபரப்பு


கிள்ளியூர் அருகே வீட்டை ஜப்தி செய்ய வந்த ஊழியர்களுடன், வீட்டின் உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் விரிவிளை பகுதியை சேர்ந்த புஷ்பலீலா, கலீல் என்பவரிடம் தனது வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்கியுள்ளார். இந்தநிலையில் கடனை திரும்பி செலுத்தாத காரணத்தினால், புஷ்பலீலாவின் வீட்டை ஜப்தி செய்து கலீலிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நீதிமன்ற ஊழியர்கள், வீட்டை ஜப்தி செய்ய முயன்றனர். அப்போது புஷ்பலீலா, அவரது மருமகள் உள்ளிட்டோர் தற்கொலை மிரட்டல் விடுத்து ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஊழியர்கள், அவர்களை வெளியேற்றி வீட்டை ஜப்தி செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்