11th ரிசல்ட்டில் சொல்லி அடித்த மாணவிகள்..! - அப்போ மாணவர்கள் நிலை?

Update: 2023-05-19 15:15 GMT

தேர்வு எழுதிய 4 லட்சத்து 15 ஆயிரத்து 389 மாணவியர்களில், 3 லட்சத்து 91 ஆயிரத்து 968 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 94 புள்ளி 36 ஆக உள்ளது. 3 லட்சத்து 61 ஆயிரத்து 454 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 3 லட்சத்து 14 ஆயிரத்து 444 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் . தேர்ச்சி சதவீதம் 86.99 சதவீதமாக உள்ளது. மாணவர்களைவிட மாணவியர் 7.37 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆயிரத்து 792 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் தேர்வு எழுதிய மாணவர்களில், திருப்பூர் மாவட்டம் 96.38 சதவீதம் பெற்று முதலிடத்தையும், ஈரோடு மாவட்டம் 96.18 சதவீதம் பெற்று 2- ம் இடத்தையும், கோயம்புத்தூர் மாவட்டம் 95.73 சதவீதம் பெற்று 3 ம் இடத்தையும் பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்