வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தல்...கேரளாவை சேர்ந்த 4 பேர் கைது

Update: 2022-10-05 14:16 GMT

வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தல்...கேரளாவை சேர்ந்த 4 பேர் கைது 

கேரள மாநிலம் நெடும்பாசேரி சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்கு கடத்தி வரப்பட்ட 3 கிலோ 250 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில், தங்கத்தை கட்டியாகவும், தூள் வடிவமாகவும், பேஸ்ட் வடிவிலும் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

இந்த கடத்தல் தொடர்பாக கேரள மாநிலம் மலப்புரம், காசர்கோடு மற்றும் கோழிக்கோடு பகுதிகளை சேர்ந்த 4 பேரை கைது செய்து,

சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்