ஆரம்ப சுகாதார நிலையத்தில் களைகட்டிய,புத்தாண்டு கொண்டாட்டம்... - விசில் பறக்க ஆடிப்பாடிய செவிலியர்கள்

Update: 2023-01-02 06:59 GMT

24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றும் மருத்துவர்களும் செவிலியர்களும் சோர்வடைந்துவிடக் கூடாது என்பதற்காக, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆடல், பாடலுடன் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலையத்தில், விளையாட்டுப் போட்டிகளைத் தொடர்ந்து மருத்துவர்கள் பாடல்களைப் பாடினார்கள்.

செவிலியர்கள், பாடலுக்கு உற்சாகமாக நடனமாடினார்கள். உடனிருந்தவர்கள் கைதட்டி வரவேற்று மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்