மருத்துவமனையில் கூலரை அணைத்த பெண் - தட்டிக்கேட்ட நபரை காலணியால் சரமாரியாக தாக்கிய அதிர்ச்சி காட்சி

Update: 2022-10-20 04:17 GMT

சட்டீஸ்கரில், மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவில் உறங்கிக் கொண்டிருந்த நபரை, பெண் ஒருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. சட்டீஸ்கரில் உள்ள மருத்துவமனையில், புற நோயாளிகள் பிரிவில் இயங்கிக் கொண்டிருந்த கூலரை, அங்கிருந்த பெண் ஒருவர் அணைத்ததாக கூறப்படுகிறது. கூலரை அணைத்ததால், உறக்கத்திலிருந்து விழித்த நபர், அதனை தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே, வாய் தகராறு ஏற்பட, கோபமடைந்த பெண் அந்த நபரை குச்சியாலும், காலணியாலும் சரமாரியாக தாக்கியுள்ளார். தகவலின் பேரில் வந்த போலீசார், இருவரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது, வெளியே வெயிலின் கொடுமை தாங்க முடியாமல், புற நோயாளிகள் பிரிவில் உள்ள குளிர் நிறைந்த அறையில் அந்த நபர் உறங்கியதாக தெரியவந்தது. பின்னர் அந்த நபரை போலீசார் அறிவுறுத்தி மருத்துவமனையில் இருந்து வெளியேற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்