சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு.. பெண் போலீஸ் அளித்த பகீர் சாட்சியம் | Father | Son

Update: 2023-01-04 06:48 GMT

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான தலைமை காவலர் ரேவதி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் தாக்கப்பட்டு இறந்தனர். இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையானது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் முக்கிய சாட்சியான தலைமை காவலர் ரேவதி நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களின் வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தினர். இதையடுத்து வழக்கானது ஜனவரி 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்