சட்ட விரோதமாக கள் பானம் இறக்கிய 13 பேர்... எச்சரித்து பிணையில் விடுவித்த போலீசார்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, பதநீர் என்ற பெயரில் சிலர் கள் பானம் இறக்கி விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்தன.
இதைத்தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், கள் பானம் இறக்கிய 13 பேரை கைது செய்தனர்.
இனி கள் பானம் இறக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த போலீசார், 13 பேரையும் காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.