ரூ. 650 கோடியில் புதிய தலைமை செயலகம் - மிளிரும் கட்டிடத்தை கண்டு ரசிக்கும் மக்கள்

Update: 2023-04-29 05:06 GMT

தெலுங்கானா மாநில அரசு ரூ. 650 கோடி செலவில் அதன் தலைநகர் ஹைதராபாத்தில் மிக பிரம்மாண்டமாக தலைமை செயலகத்தை கட்டியுள்ளது. ஐதராபாத் ஹுசைன் சாகர் ஏரி அருகே 64 ஆயிரத்து 989 சதுர அடியில், 11 அடுக்கு மாடி கட்டிடமாக புதிய தலைமை செயலகம் உருவாகியுள்ளது. ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலத்தின் புதிய தலைமை செயலக கட்டிடம் நாளை திறக்கப்படவுள்ளது. இதனை தொடர்ந்து புதிய தலைமை செயலக கட்டிடம் மின்னொளியில் ஜொலிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்