சென்னை உயர்நீதிமன்றத்தில் மெட்ராஸ் பார் அசோசியேஷன் சார்பில் தேசிய மாதிரி விசாரணை
நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சான்றிதழ்களை வழங்கினார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய அரசியல் அமைப்பு மூலம் தான் இந்தியா ஆளப்பட வேண்டும் என்றும் வழக்குகளில் தீர்ப்புகள் தாமதமாக்கப்படுவதை தடுக்க தொழில்நுட்ப ரீதியாக புதிய அணுகுமுறைகள கொண்டு வரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
முன்னதாக அரசியல் அமைப்பை விட பாரதம் மிக மிக பழமையானது என ஆளுநர் ரவி பேசியதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தற்போது அதே அரசியல் அமைப்பு மூலம் தான் இந்தியா ஆளப்பட வேண்டும் என அவர் கூறியிருப்பது தனி கவனம் பெற்றுள்ளது