Thoothukudi | நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில் மிதந்த சிறுவன் - மகனை அள்ளி மடியில் போட்டு கதறிய தாய்..
தூத்துக்குடி அருகே டியூஷன் முடிந்து திரும்பிய 9ம் வகுப்பு மாணவன் அகமது ஆபித், பைக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் நிலைதடுமாறி விழுந்து அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் உடன் அவரது நண்பர் அஷ்ரப் காயமின்றி உயிர் தப்பிய நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை பணிகள் காரணமாக பல்வேறு பகுதிகளில் பள்ளமேடாக உள்ளதால் விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.