அதீத போதைக்காக கள்ளில் கலக்கப்பட்ட விஷ காய்கள் - தென்காசியில் பரபரப்பு

Update: 2023-05-17 17:05 GMT

சங்கரன்கோவில் அருகே, போதைக்காக விஷ காய்கள் கலந்து கள் விற்பனை செய்ததாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். 

சுப்பிரமணியபுரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், கள்ளுடன் விஷக் காய்கள் கலந்து விற்பனை செய்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற புளியங்குடி போலீசார், சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த திலகராஜ், லட்சுமணன், ஆறுமுகம் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஊமத்தங்காயை இடித்து கள்ளுடன் கலந்து விற்பனை செய்தது தெரியவந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்