TCS வரி உயர்வுக்கு எதிர்ப்பு கிளம்பிய எதிர்ப்பு - உடனே முடிவை மாற்றிய மத்திய அரசு
வெளிநாடுகளில் செய்யப்படும் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு 20% TCS வரி வசூலிப்பதில் இருந்து விலக்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா பேகேஜ் மற்றும் வெளிநாட்டில் கிரெடிட் கார்டு பயன்படுத்தி செய்யும் பேமெண்ட்-க்கு 5 சதவீதம் வரையிலான TCS வரி விதிக்கப்பட்ட நிலையில், அது 20 சதவீதம் வரையில் உயர்த்தப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்புகளும் விமர்சனங்களும் எழுந்த நிலையில் தனி நபர் ஒருவர் வெளிநாடுகளில் தங்களது டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஆண்டுக்கு 7 லட்சம் ரூபாய் வரை மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளுக்கு 20% டி.சி.எஸ் வரி வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.