ராஜ்பவன் முன் தீக்குளிக்க முயன்ற முதியவர் கைது
சென்னையில் கிண்டி ராஜ்பவன் முன் தீக்குளிக்க முயன்ற முதியவர் கைது செய்யப்பட்டார். சட்டமன்ற கூட்டத் தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் பேசி தொடரை தொடங்கி வைத்தார். இந்த நிலையில் தமிழை ஒழுங்காமல் பேசவில்லை என கூறி, ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜுஸ் கடையில் வேலை செய்யும் தென்காசியை சேர்ந்த ரவிசந்திரன் என்பவர், கிண்டி ஆளுநர் மாளிகை முன் தீ குளிக்க முயன்றார். ரவிசந்திரனை மடக்கி பிடித்த போலீசார், அவரைக் கைது செய்தனர்.