மணல் கடத்தலை தடுத்த RI மீது கொலை வெறித் தாக்குதல்.. - திமுக ஊராட்சி மன்றத் தலைவருக்கு போலீஸ் வலை

Update: 2023-05-28 15:31 GMT

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பிரபாகரன். பச்சமலை அடிவாரத்தில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில், ஜேசிபி இயந்திரம் மூலம் மணல் அள்ளுவதை வருவாய் ஆய்வாளர் பிரபாகன் தடுத்து நிறுத்தியுள்ளார். அப்போது அங்கு வந்த திமுகவை சேர்ந்த நரசிங்கபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் மகேஸ்வரன், ஜேசிபி உரிமையாளர் தனபால் மற்றும் அவரது நண்பர் மணி ஆகிய 3 பேரும் பிரபாகரனை வழிமறித்து, கருங்கல்லால் தலை, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் கொடூரமாக தாக்கியதுடன், கழுத்து பகுதியில் வாயால் கடித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் நிலை குலைந்த பிரபாகரனை, பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பான புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, நரசிங்கபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் மகேஷ்வரன் மற்றும் ஜேசிபி ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ஜேசிபி உரிமையாளர் தனபால் அவரது நண்பர் மணி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்