குந்தவை நாச்சியார் 2023 அழகிப்போட்டி - பரிசுத்தொகை ரூபாய் ஒரு லட்சம் - வெற்றி பெற்ற குந்தவை தேவி யார் தெரியுமா?
திருச்சியில் தனியார் அமைப்பு சார்பில் குந்தவை நாச்சியார் 2023, பட்டம் வெல்லப்போவது யார்? என்ற பெயரில் அழகிப்போட்டி நடைபெற்றது.
சோழ இளவரசியான குந்தவை நாச்சியாரை நினைவு படுத்தும் விதமாக நடைபெற்ற இந்த போட்டியில், ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். திருமணம் ஆனவர்கள் மற்றும் ஆகாதவர்களுக்கு என தனித்தனியாக இந்த போட்டியானது நடத்தப்பட்டது. சோழர்காலத்து இளவரசியை போலவே, நடந்து வந்த போட்டியாளர்கள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர். முடிவில், முதல் பரிசான ஒரு லட்ச ரூபாயை டாக்டர் காயத்ரி தட்டிச் சென்றுள்ளார். மேலும் பங்கு பெற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.