ஆட்டிசம் பாதித்த இளைஞர்... வீல்சேரில் வந்து கருணாநிதிக்கு மரியாதை

ஆட்டிசம் பாதித்த இளைஞர் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்து கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.;

Update: 2022-06-04 01:19 GMT

ஆட்டிசம் பாதித்த இளைஞர் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்து கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். சிங்கப்பூரில் வசிக்கும் ஆரிஷ் எனும் ஆட்டிசம் பாதித்த இளைஞர், மறைந்த கருணாநிதி பிறந்தநாளை ஒட்டி சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு தனது தாய் உடன் வந்துள்ளார். மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்திற்கு வீல்சேரில் சென்ற இளைஞர், கருணாநிதியின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தி பொதுமக்ளுக்கு இனிப்புகள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கருணாநிதியிடம் அரசியல் மற்றும் இலக்கிய பணி இரண்டுமே பிடிக்கும் என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்