"உண்மை வெளிவரும் வரை ஜாமின் வழங்கக் கூடாது" - கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கில் பரபரப்பு..!

Update: 2022-08-01 11:19 GMT

"உண்மை வெளிவரும் வரை ஜாமின் வழங்கக் கூடாது" - கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கில் பரபரப்பு..!

  • சிபிசிஐடி போலீஸ், ஸ்ரீமதி பெற்றோர் எதிர்ப்பை தொடர்ந்து, பள்ளி தாளாளர் உள்பட 5 பேரின் ஜாமின் மனு மீதான விசாரணையை விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் தள்ளி வைத்தது.
  • மாணவி ஸ்ரீமதி வழக்கில் கைதான கனியாமூர் தனியார் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் ஜாமின் கோரும் மனுவை விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் இன்று விசாரித்தது. விசாரணை ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதால் 5 பேருக்கும் ஜாமின் வழங்கக் கூடாது என சிபிசிஐடி போலீஸ் தரப்பிலும், உண்மை வெளிவரும் வரை கைதானவர்களுக்கு ஜாமின் வழங்கக் கூடாது என ஸ்ரீமதி பெற்றோர் தரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 5 பேரின் ஜாமின் மனு மீதான விசாரணையை வரும் 10ஆம் தேதி தள்ளிவைத்த நீதிபதி சாந்தி, விரிவான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வழக்கின் வாதம் முடிந்தவுடன் நீதிமன்றத்தில் வெளியே வந்த ஸ்ரீமதியின் தாய் செல்வி, தனது மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றார். 
Tags:    

மேலும் செய்திகள்