"பிரதமர் மோடி பட்டப்படிப்பு படித்தது உண்மையா?" - அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி | PM Modi

Update: 2023-04-01 13:51 GMT

பிரதமரின் பட்டப்படிப்பு சான்றிதழ் விவரங்களை கேட்ட மனுவை தள்ளுபடி செய்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குஜராத் உயர்நீதிமன்றம் ரூ. 25,000 அபராதமாக விதித்தது. இது தொடர்பாக டெல்லியில் காணொளி காட்சி வாயிலாக செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் என்பவர் ஒரே நாளில் ஏராளமான முடிவுகளை எடுக்க வேண்டி இருப்பதால் அவர் கல்வியறிவு கொண்டவராக இருப்பது அவசியம் என தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு விவகாரத்தின் சந்தேகத்தை மேலும் அதிகரித்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார். பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் இருக்குமானால் அது ஏன் காட்டப்படவில்லை எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்