"70 கோடி இந்தியர்கள் டேட்டா என் கையில்.." - இந்தியாவை அதிரச் செய்யும் டேட்டா திருட்டு - மாணவர்கள் முதல் அதிகாரிகள் வரையில்...

Update: 2023-04-04 03:02 GMT
  • சுமார் 70 கோடி இந்தியர்களின் சுய விபரங்களை திருடியவரை, ஐதராபாத் போலீஸ் கைது செய்து விசாரித்து வருகிறது.
  • தகவல் திருட்டு தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்திய ஐதராபாத் போலீசார், அரியானாவை சேர்ந்த வினய் பரத்வாஜ் என்பவரை கைது செய்துள்ளனர்.
  • அவரிடம் சுமார் 70 கோடி இந்தியர்கள் தகவல் இருந்ததாக போலீஸ் தெரிவித்துள்ளது.
  • நீட் மாணவர்கள், ஜிஎஸ்டி, ஆர்.டி.ஓ. தரவுகள், அமேசான், நெட்பிளிக்ஸ் இணையதளங்கள் என சகட்டுமேனிக்கு பல இடங்களில் தகவல்களை திருடியுள்ளார்.
  • ஒரு கோடிக்கும் அதிகமான தமிழர்கள் தரவையும் அவர் திருடியிருக்கிறார்.
  • ஆதார், பான் கார்டு போன்ற பாதுகாப்பு தகவல்களையும் திருடியவர் அவற்றை கிளவுடு தளத்தில் விற்பனை செய்திருக்கிறார் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • குஜராத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கு இணையதளத்தை வடிவமைத்து கொடுத்த போது வினய் பரத்வாஜ் தகவல் திருட்டு பணிகளை செய்ய தொடங்கியதாகவும், குஜராத் தொழில் அதிபருக்கு அவர் தகவல்களை வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதுகுறித்து விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கும் ஐதராபாத் போலீசார், இணையதளங்களில், தனிநபர்களிடம் சுய விபரங்களை பகிர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்