தாய்லாந்தை ஊதித்தள்ளிய இந்தியா... இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேற்றம்

Update: 2022-10-13 17:26 GMT

ஆசியக் கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு, இந்திய மகளிர் அணி முன்னேறி உள்ளது.

ஆசியக் கோப்பை மகளிர் டி20 தொடர் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. சில்ஹெட் நகரில் இன்று நடந்த முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி, கத்துக்குட்டியான தாய்லாந்து மகளிர் அணியுடன் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக தொடக்க வீராங்கனை சஃபாலி வர்மா 42 ரன்கள் அடித்தார். பின்னர் 149 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தாய்லாந்து மகளிர் அணி, இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை சாய்த்த நிலையில், 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 74 ரன்களை மட்டுமே தாய்லாந்து மகளிர் அணி எடுத்தது. இதன்மூலம், 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி, தொடர்ச்சியாக 8வது முறையாக ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது

Tags:    

மேலும் செய்திகள்