காய்கறி விலையை தொடர்ந்து அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலையும் பல மடங்கு உயர்ந்துவிட்டது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அரிசி மூட்டைகள் வாங்க வருபவர்கள் விலை வாசி உயர்வைக்கண்டு விழி பிதுங்கி அதிர்ச்சி அடைந்தனர்.கடந்த மாதம் அரிசி மட்டுமே கிலோவுக்கு 10 ரூபாய் இருந்து 15 ரூபாய் வரை உயர்ந்திருந்தது. குறிப்பாக, பொன்னி, புழுங்கல் அரிசி 25 கிலோ மூட்டை ஆயிரத்து 250 ரூபாய்க்கு விற்று வந்த நிலையில் தற்போது ஆயிரத்து 600 ஆக விலை உயர்ந்துவிட்டது. இதேபோல் மளிகை பொருள்களும் உயர்ந்து விட்டனர்.