இந்திய வம்சாவளி மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள வீடுகள்... வீட்டு பத்திரங்களை வழங்க கோரி போராட்டம்
இந்திய வம்சாவளி மக்கள் செறிந்து வாழும் பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சட்டரீதியான உறுதிப்பத்திரத்தை வழங்குமாறு கோரி கொழும்பில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த போராட்டத்தில் அவர்களின் நில உரிமையை உடனடியாக பெற்று வேண்டும் என்றும், பழமையான வீட்டு வாழக்கை போதும் என்றும் பதாகைகளை தாங்கி, கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் 1987 ஆம் ஆண்டிற்கு பின் பெருந்தோட்டங்களில் கட்டப்பட்ட வீடுகளுக்கு வீட்டுரிமைப் பத்திரங்களை வழங்குமாறு கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.