பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும்
வரும் 11, 12ஆகிய தேதிகளில் தமிழகத்திற்கு அடுத்தடுத்து வர உள்ளனர். தமிழகத்தில் பாஜகவை வளர்ப்பதற்கு, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை முயற்சித்து வருகிறார். ஆளும் கட்சி திமுகவாக இருந்தாலும் உண்மையான எதிர்கட்சி தாங்கள் தான் என்றும் பேசி வருகின்றார். இந்நிலையில், வரும் 11ஆம் தேதி பிரதமர் மோடி திண்டுக்கலில் உள்ள காந்தி கிராம கிராமிய கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வர உள்ளார். மறுநாள் 12ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சென்னை கலைவாணர் அரங்கில் தனியார் நிறுவனம் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் வருகையால், தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.