Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-02-2023) | Morning Headlines | Thanthi TV
மார்ச் இரண்டாவது வாரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல்...
பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்குவது குறித்து அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு...
இன்னும் 5 மாதங்களில் மகளிருக்கான உரிமைத்தொகை வழங்கப்படும்..
ஈரோடு பிரசாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி...
திருவாரூரில் மேற்கூரையுடன் கூடிய நெல் சேமிப்பு கிடங்கில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு...
1500 மெட்ரிக் டன் நெல் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல்...
நடப்பு ஆண்டில் தேசிய நெல் கொள்முதல் அளவு, 700 லட்சம் மெட்ரிக் டன் அளவை தாண்டியது...
விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் பணம் போடப்பபட்டதாகவும் மத்திய அரசு தகவல்...
சென்னை அயனாவரம் பகுதியில் நேற்று நள்ளிரவில், பிரபல ரவுடி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு...
திருவள்ளூரில் கைது செய்து அழைத்து வந்தபோது, போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயற்சித்ததால் அதிரடி...
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓ.பி.எஸ் அணி மாவட்ட செயலாளர் உட்பட கட்சி நிர்வாகிகள் 106 பேர் கூண்டோடு ராஜினாமா...
விலகிய மாவட்ட செயலாளரை எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராக ஓ.பி.எஸ். நியமித்ததால் குழப்பம்...
300 கோடி செலவு செய்தால் 3000 கோடி திருடலாம் என்று நம்பிக்கையில் செலவு செய்வதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றச்சாட்டு...
ஈரோட்டில் மக்களை மந்தையில் அடைப்பதை போல் அடைத்து விட்டு 500 ரூபாய் கொடுப்பதாகவும் புகார்...
ஈரோடு இடைத் தேர்தலில் சென்னை மேயர் பிரியா பிரசாரம்...
டிரம்ஸ் வாசித்தும், குழந்தைகளை கொஞ்சியும் வாக்கு சேகரித்தார்...
சிறுநீரக கல் பிரச்சினை தொடர்பாக, சென்னை மருத்துவமனையில் நடிகர் பிரபு அனுமதி...
ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்...
500 கோடி ரூபாய் மோசடியில் சிக்கிய ஹிஜாவு நிறுவனத்தின் நிர்வாகி தற்கொலை...
நிறுவனத்தின் தலைவர் சரணடைந்த நிலையில், அதிர்ச்சி முடிவு...
ஓரினச்சேர்க்கை திருமணம் வாயிலாக கத்தோலிக்க குடும்ப கலாச்சாரங்களை அழிக்கிறார்கள்...
மேற்கத்திய நாடுகள் மீது ரஷ்ய அதிபர் புதின் குற்றச்சாட்டு....
விப்ரோ நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்களின் சம்பளம், பாதியாக குறைப்பு...
ஆள்குறைப்பு செய்யப்போவதில்லை எனவும் சம்பள உயர்வு அளிக்கப்போவதாகவும் டிசிஎஸ் நிறுவனம் அறிவிப்பு...
இந்தியா - சிங்கப்பூர் இடையே யு.பி.ஐ செயலிகள் இணைப்பு...
இனி சிங்கப்பூர் - இந்தியா இடையே கூகுள் பே, போன் பே போன்ற செயலிகள் மூலமே எளிதில் பணம் அனுப்பலாம்...
இந்தியாவில் 30 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பிப்ரவரி மாதத்தில் கடும் வெயில் கொளுத்துகிறது...
அகமதாபாத்தில் அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது...