1 நிமிடத்தில் 30 முறை வஜ்ராசனம் செய்து அசத்திய சிறுமி - நேரில் அழைத்து பாராட்டிய ஈ.பி.எஸ்

Update: 2023-05-15 05:49 GMT

கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையத்தில், ஐந்து வயது சிறுமி வஜ்ராசனம் என்ற யோகாசனம் செய்து உலக சாதனை படைத்தார். தரையில் மண்டியிட்டு பின்நோக்கி வளைந்து, கால்களுக்கு இடையே தலையை கொண்டு செல்லும் வஜ்ராசனத்தை, ஒரு நிமிடத்தில் 30 முறை செய்து அசத்தினார். இன்டெர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட், வேல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட், ஆசிஸ்ட் உலக சாதனை ஆகிய மூன்று புத்தகங்களில் இந்த சாதனை இடம் பிடித்துள்ளது. இதனிடையே, அதிமுக பிரமுகர் சிவகுமார் என்பவரின் மகளான சிறுமி லக்சயாவை நேரில் அழைத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்