ஆத்தி..இவ்ளோ பெருசா..? 21 அடி உயரத்தில் ராட்சத அரிவாள்.. நேர்த்திக்கடனுக்காக இப்படியா..?
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு, கருப்பண்ணசாமிக்கு நேர்த்திக் கடனாக செலுத்த பிரம்மாண்ட அரிவாள் தயார் செய்யப்பட்டு வருகிறது.திருபுவனம் பேருந்து நிலையம் அருகே பத்துக்கும் மேற்பட்ட அரிவாள் பட்டறைகள் இயங்கி வருகின்றன. இந்த பட்டறையின் உரிமையாளர்கள், திருப்பாச்சேத்தியை பூர்வீகமாக கொண்ட நிலையில், வியாபாரத்திற்காக திருப்புவனத்தில் பட்டறைகள் அமைத்து தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், மதுரை சித்திரை விழாவை முன்னிட்டு, அழகர் கோயிலில் உள்ள கருப்பண்ணசாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்த, 300 கிலோ எடை, 21அடி உயரம் மற்றும் 200 கிலோ எடை, 18 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட அரிவாள் தயார் செய்யப்பட்டு வருகிறது.