விடுதி உணவில் கிடந்த "அரணை"..15 மாணவிகளுக்கு நேர்ந்த சோகம் - அரசு மருத்துவ கல்லூரியில் பரபரப்பு

Update: 2022-12-05 09:44 GMT

கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விடுதியில், உணவு சாப்பிட்ட 15 மாணவிகளுக்கு, வாந்தி மயக்கம் ஏற்பட்டதை அடுத்து, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இங்கு மாணவிகள் தங்கி இருக்கும் சிகப்பி நர்சிங் விடுதியில் வழங்கப்பட்ட உணவில், அரணை இருந்ததாக கூறப்படுகிறது.

அந்த உணவை சாப்பிட்ட சுமார் 15 மாணவிகளுக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை அடுத்து, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற மாணவிகள், சிகப்பி நர்சிங் விடுதியில் சுகாதாரமற்ற உணவு வழங்கி வருவதாகவும். அதே போன்று கழிப்பிட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் சரியான முறையில் செய்து தரவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தரை சந்தித்து புகார் அளிக்க உள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் மாணவிகள் எச்சரித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்