அதிகாரி முன்னிலையில் தலையில் பெட்ரோலை ஊற்றிய விவசாயிகள் - பரபரப்பு சம்பவம்

Update: 2022-11-23 14:59 GMT

பழனி கோவிலுக்கு சொந்தமான பலநூறு ஏக்கர் விவசாய நிலங்களை ஏலம் விடக்கூடாது என கோரி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன‌. இந்த விவசாய நிலங்களை, நெல் குத்தகை மற்றும் பண குத்தகை ஆகியவற்றின் அடிப்படையில் பல ஆண்டுகளாக விவசாயிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட நிலங்களை திருக்கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கும்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் பழனி கோவில் நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட நிலங்கள் இன்று ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவில் நிலங்களை ஏலம் விடக்கூடாது எனக்கூறி 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பழனி கோவில் இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பழனி கோவில் உதவி ஆணையர் லட்சுமியிடம் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஆவேசமடைந்த 2 விவசாயிகள், தலையில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்