மது குடிப்பதற்கான வயது வரம்பு குறைப்பு? - ஆலோசனையில் கர்நாடக அரசு

Update: 2023-01-16 06:38 GMT

கர்நாடாக அரசு மது அருந்துபவர்களின் வயதை குறைப்பது குறித்த வரைவு அறிக்கையை தயார் செய்துள்ளது.

கர்நாடகாவில் மது அருந்துபவர்களின் வயது 21 லிருந்து 18 ஆக குறைப்பது குறித்து கர்நாடகா அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

இது தொடர்பாக ஒரு வரைவு அறிக்கையும் தயார் செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 30 ஆம் தேதி வரை பொதுமக்கள் இந்த வரைவு அறிக்கை தொடர்பாக தங்களது ஆட்சேபனைகளை பதிவு செய்யலாம் எனவும் அறிவித்துள்ளது.

கர்நாடக கலால் சட்டத்தின் படி மதுபானம் அருந்துவதற்கு குறைந்தபட்ச வயது 18 என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், கலால் உரிமங்கள் விதிகள் 1967 இன் படி, மது குடிப்பதற்கான வயது 21 என கூறப்படுகிறது.

இந்த குழப்பத்தை போக்கவே வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு எதிராக சமூக ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்