2 ஆண்டுகளில் 4 முறை மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் | வேதனையில் ராமநாதபுரம் மாவட்ட மக்கள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் 4 முறை மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக சுமார் 3 ஆண்டுகாலம் பதவி வகித்த வீரராகவ ராவ் என்பவர், 2 ஆண்டுகளுக்கு முன் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக நியமிக்கப்பட்ட தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எட்டே மாதங்களில் தஞ்சை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அவரை தொடர்ந்து ஆட்சியர்களாக நியமிக்கப்பட்ட சந்திரகாலா, சங்கர்லால் குமாவத் ஆகியோரும் சில மாதங்களிலேயே பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்தநிலையில் தற்போதைய ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸூம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு மாவட்ட ஆட்சியர்கள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவது அம்மாவட்ட மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியர்கள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவது மாவட்டத்தில் வளர்ச்சியை பாதிக்கும் என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.