தானே சமைத்து வீடு வீடாக சென்று உணவை கொடுத்த பெண் கவுன்சிலர் - அன்பு மழையில் நனைந்த மக்கள்
சென்னை ஆர்.கே. நகரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு தயார் செய்து, வீடு வீடாகச் சென்று வழங்கிய பெண் கவுன்சிலரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். ஆர்.கே.நகர் தொகுதிக்கு உள்பட்ட 40-ஆவது வார்டில் உள்ள செல்லியம்மன் கோயில் தெரு, மாதா கோயில் தெரு, வ.உ.சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக சாலையில் மழை நீர் தேங்கியது. உடனடியாக இயந்திரங்கள் மூலம் மழை நீர் அகற்றப்பட்டாலும், மக்கள் வெளியில் வர முடியாமல் வீட்டுக்குள் முடங்கினர். இதையடுத்து, அந்த வார்டின் மாமன்ற உறுப்பினர் குமாரி நாகராஜ் தனது சொந்த செலவில் உணவு தயார் செய்து, ஒவ்வொரு வீடாகச் சென்று அப்பகுதி மக்களுக்கு விநியோகித்தார்.