பணி நிரந்தரம் கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகம் முன்பு போராட்டம் நடத்தி வரும் பகுதி நேர ஆசிரியர்கள், 14வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 8ம் தேதி போராட்டத்தை தொடங்கிய அவர்கள், தமிழக அரசு விரைந்து தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர். பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முரளி, அரசு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் என்றும், கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தார்.