தக்காளிக்கு போட்டியான மளிகை விலை...அமைச்சர் சக்கரபாணி தலைமையில் கூட்டம்...

Update: 2023-07-12 01:45 GMT

தக்காளி மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த விலை கண்காணிப்பு குழு கூட்டம் தலைமை செயலாளர் மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது.

பருப்பு வகைகள், மிளகாய் தூள், சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், நீட்டு மிளகாய் உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. அரிசி விலையும் வெகுவாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், உணவு பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவது குறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில், விலை கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் வாயிலாக வணிகர் சங்கங்கள், நுகர்வோர் அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்