இந்திய ஹாக்கி அணியில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த கார்த்திக்கிற்கு, வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று வழங்கினார். அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர், 2022-ஆம் ஆண்டு ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். இதையடுத்து, கார்த்திக்கின் சாதனையை போற்றும் விதமாக, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கார்த்திக்கிற்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான ஆணையை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று கார்த்திக் குடும்பத்தினரிடம் வழங்கினார்.