பிரபல துணிக்கடைக்குள் புகுந்த ரவுடிகள்... சிக்கிய கடை ஓனர்கள் - விசாரணையில் வெளியான 'திடுக்' தகவல்

Update: 2023-01-29 07:03 GMT

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் துணிக்கடையில் தொழில் போட்டி காரணமாக ரவுடியை ஏவி தாக்குதலில் ஈடுபட்ட பிரபல யூடூபர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பழைய வண்ணாரப்பேட்டையில் துணிக்கடைக்குள் 3 ரவுடிகள் புகுந்து தாக்குதல் ஈடுபடுவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்த‌து. தகவலறிந்து போலீசார் வருவதற்குள், 3 ரவுடிகளும் தப்பியோடினர். இதனால், அக்கம்பக்கத்தை சேர்ந்த கடைக்கார‌ர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், நண்பர்களாக இருந்த ராஜேஷ் மற்றும் விக்னேஷ் ஆகியோர் தனித்தனியே துணிக்கடை வைத்த‌தும், தொழில் போட்டி காரணமாக இருவருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டதும் தெரிய வந்த‌து.

மேலும், ராஜேஷின் துணிக்கடை பற்றி யூடியூபில் அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதால் தகராறு ஏற்பட்டதும், இரு தரப்பினரும், 3 ரவுடிகளை பயன்படுத்தி மாறி மாறி மிரட்டி வந்த‌தும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, மூன்று ரவுடிகளையும் கைது செய்த போலீசார், யூடியூபில் அவதூறாக கருத்து பதிவிட்ட விக்னேஷையும் புகாரின் அடிப்படையில் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்